Latest News :
- Police can lawfully arrest drivers for breath test, says Bombay High Court
- Lawyers Line (Law Journal - Tamil) Just Rs. 300/- pay online and get delivered at your home directly...
- Jayalalithaa`s bail plea to come up today (Monday) in Supreme Court
- Madras High Court moots parents plight over marriageable age for girls
- சவால்களை நோக்கி சட்டக் கல்வி...
![]()
இலவச சட்ட உதவி மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் புதிய முயற்சி ஊழலை ஒழிக்க முடியுமா ? ஆம் ஒழிக்க முடியும். பொதுமக்களின் மத்தியில் விழிப்புணர்வு வந்தால் ஆனால், மெத்தப்படித்த மேதா விகளே கொடுக்கவும் வாங்கவும் தயாராயிருக்கும் போது, இந்த முயற்சி சாத்தியமாகுமா? வெற்றி கிடைக் குமா? இந்தியாவைப் பொறுத்த வரையில், ஊழல் ஒரு மலிவான கடைச்சரக்காகிவிட்டது. ஊழலில் சம்பந்தப் பட்டவர்க்கு அது, இருமலைப் போன்ற தும்மலைப் போன்ற சர்வ சாதாரணமான விஷயம். இந்திய ஊழல் கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்ட நீதித்துறை செயல்பாடுகளினால் பாதுகாக்கப்படுகிறது. ஒத்திவைப்பு, வாயிதா, பணிநிறுத்தம், நீதியற்ற தீர்ப்புகள் என்ற பல வழிமுறைகள் ஊழல் என்ற சாபக்கேட்டிற்கு தூண்டுகோலாய் செயல்படுகின்றன. நீதித்துறை கண்ணியத்துடன் செயல்பட்டால், 80% ஊழல் சமூகத்துறைகளிலிருந்து மறைந்து விடும் எனவே, பொதுத்துறையிலும், தனித்துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால், நீதித் துறையில் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட வேண்டும். நீதித்துறையைச் சீர்படுத்த, இந்திய பிரஜைகளை சீர் படுத்த வேண்டும், நீண்ட தூக்கத்திலிருந்து அவர்களை உலுக்கி எழுப்ப வேண்டும். ஆனால், அரசியல்வர்க்கம், அதிகார வர்க்கம் இதற்கு உடன்படுமா? என்பது விடைகாண முடியாத வினா. ஏனெனில் இவை இரண் டுமே ஊழல் என்ற விஷ விருட்சத்தின் வேர்கள். பொதுமக்களைத் தட்டி எழுப்ப, அவர்களுக்கு சமுகப் பிரக்ஞையை ஏற்படுத்த முக்கியத் தேவை அப்பழுக்கற்ற சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் கட்சி, பொதுஜனம் என்ற உயர்ஜீவியைப் பற்றி கவலைப் படக்கூடிய ஒரு அரசியல் சித்தாந்தம். நீதியியல் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு உரத்த சிந்தனைதான் ஊழல் பண்பாட்டிற்கு வேட்டு வைக்கும். ஆனால், இது ஒரு மிகப்பெரிய சவால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும், ஜனநாயக அஸ்த்திரங்களும் இன்றைய நீதியியலால் படைக்கப்பட்டவை. நவீன அரசியல் வியாபாரிகள் தொழில் நடத்த சாதகமான தட்பவெப்பத்தை அமைத்துக் கொடுப்பவை. நீதித் துறை உணர்வோட்டம் (Judicial Act) மக்கள் மனதில் வந்துவிட்டால், பணநாயகம் தோல்வியுறும். ஜனநாயகம் வெற்றி பெறும். இலஞ்சம் என்ற கொடிய அரக்கனிடமிருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழலுக்கு எதிரான குரல் கொடுக்கச் செய்தலே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ என் பயணத்தைத் தொடர்கிறேன்... இனி வரும் ஒவ்வொரு இதழிலும் நமது இயக்கத்தின் வெற்றிச் செய்திகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.. இதன் ஆரம்பகட்டமாக இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஊழல் தடுப்புச் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.. அரசு ஊழியர்கள், இந்திய பீனல்கோடு, 1860 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988, Benami Transactions (Prohibition) Act 1988, Prevention Of Money Laundering Act, 2002 என்ற சட்டங்களின் அடிப்படையில் அரசு ஊழியர்களைத் தண்டிக்கிறது. ஊழல் தொடர்புடைய சட்டங்களின் முக்கிய அம்சங்கள்: இந்திய குற்றவியல் சட்டம் 1860 அரசுப் பணியாளர்கள், இராணுவத்துறை பணி யாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள், மத்திய மாநில அரசுத்துறைகளில் பணிபுரிபவர்கள் இவர்களை IPC, Public Servent என்று விளக்கப்படுகிறது. பிரிவு 169 சட்டத்திற்கு புறம்பான வழியில் சொத்துக்களை வாங்குகிற, அல்லது முயற்ச்சிக்கிற ஒரு பொதுத்துறை அலுவலருடன் தொடர்புடையது. அந்த அரசு அதிகாரிக்கு 2 வருடம் வரை சிறை தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும். பிரிவு 409, அரசு ஊழியரின் நம்பிக்கை மீறல் என்ற குற்றத்தோடு தொடர்புடையது. அந்த அரசுப் பணியாளர் ஆயுள் தண்டனை (அ) 10 வருடத் தண்டனை மற்றும் ஒரு அபராதத் தொகை என்ற தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். ஊழல் தடுப்புச் சட்டம், (Prevention Of Corruption Act, 1988) PC ல் தொகுக்கப்பட்டுள்ள ஊழியர் பிரிவுகளைத் தவிர, ‘அரசு ஊழியர்’ என்ற சொற்றொடர் அரசிடமிருந்து நிதியுதவி பெறும் கூட்டுறவுச் சங்கங்களில் பதவி வகிப்போர், பல்கலைக்கழக அலுவலர்கள், பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள் என்பவர்களையும் உள் ளடக்கியது. ஒரு பொதுத்துறை அலுவலர் அவருக்கு உரித்தான சட்டபூர்வமான சம்பளத்தைத் தவிர வேறு தொகையை ஒரு அலுவலகப் பணிக்காகப் பெற்றால் குறைந்தபட்சம் 6 மாத தண்டனை அதிக பட்சம் 5 வருடத் தண்டனை அதோடு அபராதமும் அவருக்குத் தண்டனையாக விதிக்கலாம். ஒரு அரசுப் பணியாளர், அலுவலகப் பணியை வேறு ஒரு நபருக்காக மேற்கொள்ளும் போது, அவரிடமிருந்து ஒரு விலையுயர்ந்த பொருளைப் பெற்றாலோ (அதற்கான விலையைக் கொடுக்காமல்) குறைவான விலையைக் கொடுத்தாலோ குறைந்தது 6 மாதம், அதிகமாக ஐந்து வருடம், மற்றும் அபராதம் என்ற தண்டனை பெறத் தகுதியானவர். ஒரு அரசுப் பணியாளரைத் தண்டிக்க மத்திய, மாநில அரசுகளிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். பினாமித் தொடர்புகள் (தடுப்பு) சட்டம் 1988 இந்தச் சட்டம் பினாமி ஒப்பந்தங்களை (சொத்துக்களை, அதற்காக விலை கொடுக்காதவரின் பெயரில் வேறு ஒருவர் விலைகொடுத்து வாங்குவது) தடைசெய்கிறது. ஆனால், தன் மனைவியின் பெயரில் அல்லது திருமணம் ஆகாத மகளின் பெயரில் ஒருவர் சொத்துக்களை வாங்கலாம். பினாமி சொத்துக்களை வாங்குபவர் 3 வருடம் மேலும் அபராதம் என்ற தண்டனை பெற்ற தகுதியானவர். அனைத்து பினாமி சொத்துக்களும் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியால் கைப்பற்றப்படலாம். அதற்காக விலை ஏதும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. பண மோசடித் தடைச்சட்டம், 2002 (கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடுக்கும் சட்டம்) சட்டத்திற்குப் புறம்பான வரிகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சிகளில் ஒருவர் ஈடுபட்டால், மேலும், அவ்வாறு சம்பாதிக்கின்ற பணத்தை கறையற்ற சுத்தமான சொத்து என்று வாதிட்டால், சமூகத்தின் முன்னால் தான் பணம் ஈட்டுகின்ற தவறான வழிகளை மறைத்து, நாடகமாடினால், அது மோசடித்தனம் என்று கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல குற்றங்களில் தன்னை ஈடுபடுத்தி, அதன் மூலம் ஒருவர் பொருள் ஈட்டினால், அது விதி மீறலாகக் கொள்ளப்படுவது.இவ்வாறு, பட்டியலில் வரும் குற்றங்களைச் செய்தால் மட்டுமே ,அவர் மோசடித்தனத்தில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டு, அதற்குரிய தண்டனை அவருக்கு வழங்கப்படும். அவர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி செய்கிறார் என்று கருதப்பட்டு, அவர் தண்டனைக்குரியவர் ஆகிறார். இத்தகைய மோசடித்தனத்தின் மூலமாக ஒருவர் பணம் ஈட்டினால், 3 முதல் 7 வருடம் வரை கடுங்காவல் தண்டனை, மேலும், ரூ 5 இலட்சம் வரை அபராதம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. Narcotic Drugs And Psychotropics Substances Act 1985 சட்டத்தின்படி, போதை வஸ்து கடத்தல், விற்பனை செய்தல் என்ற குற்றங்களில் ஒருவன் ஈடுபட்டு, அது நிரூபிக்கப்பட்டால், 10 வருட கடுங்காவல் தண்டனை பெற அவர் தகுதி பெற்றவர் ஊழல் ஈடுபடும் அரசு அதிகாரிகளை புலன் விசாரனை செய்வதற்குரிய, தண்டிப்பதற்குரிய வழிமுறைகள்:& மூன்று முக்கிய அரசுத்துறை அதிகாரிகள், இத்தகைய ஊழல் வழக்குகளை விசாரனை செய்ய, புலனாய்வு மேற்கொள்ள, தண்டனை வழங்க தகுதிபெற்றவர்கள். Central Vigilance Comission (CVC), Central Bureau Of Investication (CBI), Anti Corruption Bureau (ACB)என்ற மூன்று அரசுத்துறைகளுக்கும் ஊழல் தடுப்பு அதிகாரங்கள் உடையவை. அரசு அதிகாரிகளின் பொருளாதார மோசடிகள் கறுப்புபண ஒழுங்கினங்கள் இவற்றின் மேல் நடவடிக்கை எடுக்க, Directorate Of Emforcement And Financial Intelligence Unit என்ற 2 அமைப்புகள் உள்ளன. CBI & ACB என்ற இரண்டு அமைப்புகளும், PCA 1988 & IPC என்ற சட்டத்தின் கீழ் ஊழல் வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உடையவை. .CBI நாடு முழுவதும் விசாரனை செய்ய அதிகாரம் உடையது. ACB அந்த மாநிலத்தின் ஊழல் வழக்குகளை புலனாய்வு செய்ய அதிகாரம் உடையது. அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல் வழக்குகளை மேற்பார்வையிட CVC என்ற அரசியல் சாசன அமைப் பிற்கு அதிகாரம் உண்டு. CBI, CVC யின் அதிகாரம் வரம்பிற்குட்பட்டது CVC, இத்தகைய வழக்குகளை ஒவ்வொரு துறையிலும் செயல்படும் CVC, விடம் or CBI யிடம் தெரியப்படுத்தலாம். CVC அல்லது CVO குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரியின் மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி, பரிந்துரைக்கலாம் ஆனால், அந்த அதிகாரியின் மேல் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகளைப்பற்றி, அந்தத் துறையின் மூத்த அதிகாரிகளே முடிவு செய்ய அதிகாரம் பெற்றவர்கள். வழக்குகளைத் தொடர மத்திய, மாநில அரசுகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். அரசு நியமிக்கும் அதிகாரிகள் நிதிமுறைகளில் வழக்குத் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வார்கள். PCA,1988 என்ற சட்டத்தின் கீழ் வரும் சகல வழக்குகளையும், பிரத்யேக நீதிபதிகள் விசாரிப்பார்கள். இந்த நீதிபதிகளை மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்யும். வாசகர்களும், பொது மக்களுமாகிய நீங்களும் ஊழலை ஒழிக்க கடமைப்பட்டவர்களே, ஆகையால் ``FFLAAC`` (Federation for Free Legal Aid & Anti-corruption) ல் உறுப்பினர்களாக பதிவு செய்து உங்கள் பார்வையில் நடைபெறும் ஊழல்களை சுட்டிக்காட்டி ஊழலை ஒழிக்க விழையும் இப்பேரியக்கத்தில் பங்கேற்று தனது உண்மையான இந்திய குடிமைத் தன்மையினை நிலைநாட்ட உங்களை FFLAAC அன்புடன் அழைக்கிறது. வாருங்கள் இணைந்து செயல்படுவோம்... ஊழலை வேறருப்போம்... Related links :
Recent Comments
Post your comments
Name :
Enter your Name
Email ID :
Enter your Email ID
Comments :
Solve this
Related News
P. Sathasivam is Now Honourable Chief Justice of India
PROFILE P. Sathasivam, B.A., B.L., - born on April 27, 1949. Enrolled as an Advocate on July 25, 1973 at Madras. Pract[..] |
||||||||
Copyright © 2011 Lawyers Line.. All rights reserved |