Latest News :
- Police can lawfully arrest drivers for breath test, says Bombay High Court
- Lawyers Line (Law Journal - Tamil) Just Rs. 300/- pay online and get delivered at your home directly...
- Jayalalithaa`s bail plea to come up today (Monday) in Supreme Court
- Madras High Court moots parents plight over marriageable age for girls
- சவால்களை நோக்கி சட்டக் கல்வி...
![]()
புத்தரின் போதனைகளை தெளிவாக விளக்கும் வல்லமைக் கொண்ட பிச்சு யாராவது எங்காவது இருக்கிறார்களா என்று தேடி அழைத்துவர பணித்தார். அவர்கள் பிட்சுகளை அணுகி விவரம் சேகரித்தார்கள். அதன்படி நாகசேனார் என்பவர் சிறந்த பிட்சு என்ற கண்டறிந்து அவரை அனுகி மன்னரிடம் வாதிட்டு புத்தரின் போதனைகளை நிலை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டனர். அவரும் சம்மதித்து மினான்டருடைய அரச வைக்கு வந்து இருவரும் பல நாட்கள்புத்தரின் போதனைகளைப் பற்றிவாதிட்டனர். மன்னர் மினான்ட ருக்கும் நாகசேனருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் தொகுக்கப்பட்டு மினான்டர் பங்கா என்றநூலாக வெளியிடப்பட்டது. அது வரலாற்று புகழ் பெற்ற ஆவணமாக திகழ்கிறது. டாக்டர் அம்பேத்கார் அவர்கள் அந்த கல்லூரி ஆசிரியர்களையும், மாணவர்களையும் மினான்டரைப் போல் அறிவாற்றலையும் எதையும் காரண காரியத்துடன் அறிந்து உணர்ந்து கொள்கிற ஆற்றல் பெற வேண்டும் என்று விரும்பினார். மினான்டரை பற்றிய வரலாற்றில் சில ஏடுகளில் படிப்பதோடு நின்ற இந்திய மக்களுக்கு உயர்ந்த அறிவாளியான மினான்டரை அடையாளம் காட்ட அப்போது டாக்டர் அம்பேத்கரால் மட்டும் தான் முடிந்தது. சித்தார்தா மிலிண்ட் என்று இரு நிறுவனங்களும் பலத்துடனும், எழுச்சியுடனும் வளர்ந்தது.
அங்கு தலைசிறந்த துறைமுகம் இருந்ததால், பலநாட்டு அறிஞர்களும், மேதைகளும் பல்வேறு பட்டமொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட சித்தாந்தம் உடையவர்கள் பல்வேறுபட்ட நாகரீகம் கலாச்சாரம் நிறைந்தவர்கள் ரோம் நகருக்கு நாள்தோறும் வந்து போனதால், அங்கு பகுத்தறிவு கொள்கைகள் நாத்திக கருத்துகள் நிறைந்தவர் களாக அங்கு இருந்தார்கள். அங்கு தான் சாக்ரடீஸ் பிறந்தார். உன்னையே நீ என்னிப்பார் என்றும் ஏற்றம் மிகுந்த ஏதேன் நகரத்தில் நாற்றமெடுத்த பழமையை சாடியவர் அவரின் சீர்த்திருத்த கருத்துக்களுக்காக விஷ கோப்பையை பரிசாக தந்தார்கள். அவரின் சீடர் பிளேட்டோ குடிஅரசு என்ற சிறந்த அரசியல் அமைப்பு முறையைதந்தவர், அவரின் சீடர் அரிஸ்டாட்டில் வாள்முனையில் வையத்தை வளைத்த வரலாற்றுச் சொந்தக்காரன் அலெக்சாண்டரின் ஆசிரியர். உலகமெல்லாம் வாள் முனையில் வெற்றி கண்டவன் அரிஸ்டாட்டலின் மாணவன் இப்படி வரலாற்று சிறப்பு மிகுந்த நாடு கிரேக்க நாடு அந்த நாட்டில் தான் மிலிண்டு என்ற மேதை தோன்றினார். அவர் தான் புத்தர் பெருமானின் போதனைகளில் ஈர்க்கப்பட்டு புத்த துறவிகளை தன் நாட்டுக்கு வரவழைத்து புத்தரின் உபதேசங்களை, கொள்கைகளைத் தெரிந்து கொண்டார். அத்தகைய ஆற்றல் பெற்றவரின் பெயரால்தான் மக்கள் கல்வி கழகம் ஆரம்பிக்கும் போது சித்தார்த்தா என்றும் மிரிண்ட் என்றும் அந்த கல்லூரிகளுக்கு பெயர் சூட்டினார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தர் மடமையை மூடப் பழக்க வழக்கத்தை பார்பனியத்தை எதிர்த்தார். அது போலவே, கிரேக்கத்தில் மிலிண்ட் அவர்களும் முற்போக்கு எண்ணம் கொண்ட மன்னர் புத்தமத கொள்கையை ஏற்றுக் கொண்டவர். ஆகவேதான் புத்தர் பெயரையும் மிலிண்ட் மன்னன்பெயரையும் தன் கல்வி கழக கல்லூரிகளுக்கு பெயர் சூட்டினார். இந்த மக்கள் கல்விக் கழகம், அத்துடன் நில்லாமல், பல இடங்களில் மகாராஷ்டிரத்தில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி மக்கள் தொண்டு செய்து வந்தது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த நிறுவனங்களை அடிக்கடி சென்று பார்த்து அதன் ஆசிரியர்கள், மாணவர்களை கூட்டி வைத்து சிறந்த சொற்பொழிவுகளை செய்வார். இந்த சொற்பொழிவுகள் அபூர்வ கருத்துக்களைக் கொண்டதாக இருந்தது. அண்ணலின் மாணவ, பருவ அனுபவங்களையும், தனது திறமைக்கு கிடைத்த பரிசுகளையும் விளக்கி கூறி அவ்வாறு மற்றவர்களும் உயரக்கேட்டு கொள்வார். ஒரு மாணவன், ஆயுள் பூராவும் மாணவனாகவே தொடர்ந்து இருந்தான் என்று தன்னைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் வேண்டும். மனிதர்கள் அனைவரும் தன் வீட்டில் சொந்த நூல் நிலையங்கள் வைத்திருக்க வேண்டும். தன்னைச் சுற்றி இருக்கும் ஏழை, எளியவர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அந்த நிறுவன கட்டட வேலை நடக்கும்போது, அம்பேத்கர், அவர்கள் கடும் வெயிலையும், பொருட்படுத்தாமல், வெகுநேரம் நின்று கொண்டு தொழில்நுட்ப ஏற்பாடுகளை திருத்தங்கள், விளக்கி சொல்லி மக்களுக்காக அறிவு பணியை தன் சொந்த பணியாக மேற்கொண்டார். கட்டட பணிகள் நடக்கும் போது அங்கேயே தங்க நேர்ந்தால் ஆடம்பர விடுதிகளுக்குச் செல்லாமல், அங்கேயே கல்லூரி வகுப்புகளில் சிறிய அறைகளில் தங்கிவிடுவார். ஏன் அனாவசியமாக பணத்தை செலவிட வேண்டும். ஏழை மக்களுக்காக அமைக்கப்படும் இந்த கல்விக் கழகம் சிறப்பாக வரவேண்டும். இந்த பணியில் யாரும் பணத்தை வீணாக செலவு செய்யக்கூடாது. இது மக்கள் பணம் என்பதும், எனக்கு தேவை இரண்டு ரொட்டிகள் மட்டுமே என்று கூறுவார். அம்பேத்கர் அவர்கள் கட்டட வேலை நடந்தபோது, ஒரு சுவையான நிகழ்ச்சி அம்பேத்கரின் நண்பர்கள் சிலர் அம்பேத்கர் அவர்கள் கட்டட பணிக்கு கல்லூரி கட்ட நிதி இல்லாமல் சிரமப்படுகிறாரே, நாம் ஏதோவது இவருக்கு பணம் வாங்கிக் கொடுப்போம் என்று நினைத்து அப்போது அங்கே அவுரங்காபாத்துக்கு ஓட்டல் ஒன்றில் இந்தி திரைப்பட நடிகர் திலிப்குமாரும், அவர் சகோதரியும், அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் காணவந்தவர்கள் ஒரு ஆடம்பர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அம்பேத்கர் நண்பர்கள் அவரிடம் சென்று கல்லூரி கட்ட நிதி கேட்க சென்று இருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரிடம் சொல்லாமல், இது தெறிந்த அம்பேத்கர் அவர்கள், ஓட்டலுக்கு உடனடியாக ஒரு ஆளை அனுப்பி நடிகரிடம் பணம் வாங்கக் கூடாது. உடனே திரும்பி வாருங்கள் என்று சொல்லிவிட்டார். நண்பர்களும் பணம் வாங்காமல் திரும்பிவந்துவிட்டார்கள். அவர்களிடம் அம்பேத்கர் வருத்தப்பட்டு சொன்னார், நடிகர்கள் தொழில் அதிபர்கள், வியாபாரிகள் ஆகியோரிடம் நான் நன்கொடை வாங்க விரும்பவில்லை. நடிகர்கள் பெயரை கூட என் நிறுவனத் தில் வைக்க மாட்டேன். எதற்காக சித்தார்த்தா என்றும் கிரேக்க அறிவாளி மிலிண்டு பெயரையும் வைத்து இருக்கிறேன் என்று கோபப்பட்டார். இந்த செய்தியை கேள்விப்பட்ட இந்தி நடிகர் திலிப் குமார், மிக அமைதியாக சொன்னார். டாக்டர் அம்பேத்கர் என் தந்தையைப் போன்றவர். நான் அவர் கருத்துக்களை உயர்வாக மதிக்கிறேன் என்று சொன்னார். அம்பேத்கரின் இந்த கல்வி பணிக்காக ஏராளமானவர்கள் தங்கள் உடல் பொருள் ஆவி என்று அர்ப்பணித்தார்கள். அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 1. ராய்சாகிப் ஜி.டி.மெஷ்ராம் என்பவர் கல்லூரி கட்டும் பணியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் இஞ்ஜினியர் அல்ல. ஆனால், தொழில் திறமை மிக்கவர். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்து கல்வி கழகத்தை சிறப்படைய செய்தவர். அதிக உழைப்பால் அவர் மாரடைப்பு நோய் கண்டு காலமானார். 2. தர்ம வீரர் தாதா சாகேப் கெயிக்வாட் என்பவர் ஜி.டி.மெஷ்ராம் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்பாகச் செய்து முடித்தவர். இப்படி ஏராளமானவர்கள் டாக்டர் அம்பேத்கரின் மக்கள் கல்வி பணிக்காக தோளோடு தோள் நின்று பணி செய்தார்கள். முதல் சந்ததிமாணவர்கள் பள்ளிக்கூட அளவில் கூட கல்வியறிவில்லாதவர்களின் பிள்ளைகள் தான் இங்கு படித்தார்கள். அவர்கள் படிப்பில் வறுமையும், வசதி குறைவும் தடைகளாக இருந்தது. இவர்கள் படிப்பை தொடர்வது சிரமமாக இருந்தது. உபகார சம்பளம் வந்ததும் உணவுக்கும், தங்கும் வசதிக்கும் போதவில்லை. குறைந்த உணவுடன் படித்தனர். இருந்த போதிலும் திட நம்பிக்கையோடும், தைரியத்தோடும் படித்து உயர்ந்தனர். தொடரும்.... Related links :
Recent Comments
Post your comments
Name :
Enter your Name
Email ID :
Enter your Email ID
Comments :
Solve this
Related News
|
||||
Copyright © 2011 Lawyers Line.. All rights reserved |