Latest News :
- Police can lawfully arrest drivers for breath test, says Bombay High Court
- Lawyers Line (Law Journal - Tamil) Just Rs. 300/- pay online and get delivered at your home directly...
- Jayalalithaa`s bail plea to come up today (Monday) in Supreme Court
- Madras High Court moots parents plight over marriageable age for girls
- சவால்களை நோக்கி சட்டக் கல்வி...
![]()
இவைகளில் தீர்வுகாண முடியாவிட்டால் மட்டுமே கடைசி முயற்சியாக நீதிமன்றத்தை அணுக வேண்டும். பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்களிடம் வரும் குடும்ப பிரச்சினை சார்ந்த வழக்குகளில் சமரச தீர்வு காணவே முயற்சிப்பார்கள். அவர்கள் வழக்கு தொடர வேண்டும் என்றோ பணம் அதிகம் ஈட்ட வேண்டும் என்றோ நினைப்பதில்லை. ஆனால், சமீப காலமாக சில வழக்கறிஞர்கள் வழக்காடிகளைப் போலவே செயல்படுவது வருத்தமளிக்கும் செய்தியாகவுள்ளது. வழக்காடிகள் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், எதிர் தரப்பினரை அவதூறு செய்வதும் சாதாரணமானது தான் என்றாலும், வழக்கறிஞர்களும் அதே போல நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். சில நாட்களுக்கு முன்னால், சென்னை குடும்ப நல நீதிமன்றமொன்றில் ஒரு பெண் வழக்காடி நீதிமன்றத்தில் தனது கணவர் மற்றும் அவர் வழக்கறிஞரின் முன்னிலையிலேயே தானும் தனது கணவரும் சேரத் தயாராக இருந்தாலும் வழக்கறிஞர்கள்தான் சேர விடுவதில்லை என்று மன்றமறிய சப்தமிட்டார். இக்குற்றச்சாட்டுக்கு அவரது கணவரோ அல்லது அவரது வழக்கறிஞரோ மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், இன்றைய காலத்தில் மற்ற வழக்குகளை விட குடும்ப பிரச்சனை வழக்குகள்தான் அதிகமாக நிலுவையிலுள்ளது. தன்னிடம் வரும் வழக்கினை அதிகபட்சம் ஓராண்டிற்குள் முடித்து வழக்காடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என ஒவ்வொரு, வழக்கறிஞரும் முடிவெடுக்க வேண்டும். அதே சமயத்தில், வேறு பல காரணங்களால் வழக்குகள் காலம் கடந்தும், நடப்பதற்கு வழக்கறிஞர்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது. வழக்காடிகளுக்கு சமரச தீர்வின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி கூடுமான வரையில் அவர்களை சமரச முயற்சிக்கு உட்படுத்த வேண்டும். குடும்ப நீதிமன்றங்களும், இரண்டாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். வாழ்வுரிமைப்படி, இடைக்கால வாழ்க்கைப்படி போன்ற மனுக்களுக்கு சட்டம் குறித்துள்ள காலத்திற்குள் தீர்வளிக்கப்பட வேண்டும். இதற்கு வழக்காடிகளும், வழக்கறிஞர்களும், நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு நல்கினால்தான் இது சாத்தியமாகும். Related links :
Recent Comments
Post your comments
Name :
Enter your Name
Email ID :
Enter your Email ID
Comments :
Solve this
Related News
|
||||||||
Copyright © 2011 Lawyers Line.. All rights reserved |