Sat 03, Dec 2022
lawyers line
You are in Home » Legal Articles » 2014 » சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் -மார்ச்-8
LATEST NEWS  
   
By Ezhil Caroline|Email the author|Mar 09,2014   (4858 views)
news
Ezhil Caroline
Advocate
ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச உழைக்கும் மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதரத்தில், உரிமையில், சமூக அமைப்பில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம் பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை ருவாக்குவதற்காகவுமே
சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்றில் பெண்களின் நிலையினை அறிவது மிகவும் அவசியமானது. மனித வாழ்க்கை பத்து இலட்ச வருடத்திற்கும் மேலான காலத்தில் துவங்கியது. ஆண் தோன்றிய போதே பெண்ணும் தோன்றியிருக்கிறாள், பின்னர் மனிதர்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேறி கணவன், மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது அவர்களது உற்பத்தி சாதனங்கள் யாவும் ஒட்டு மொத்தசமுதாயத்திற்கு சொந்தமானதாக இருந்தன. ஒவ்வொருவரும் தம் உழைப்பிற்கு சமமாக பலனை அனுபவித்தனர். பெண்கள் சமூதாயத்தில் நல்ல பதவிகளை பெற்று செல்வாக்குடனும். ஜனநாயக முறையில் மதிப்புடனும் வாழ்ந்தனர். ஆண்கள் முழுநேர வேட்டைக்காரர்களாகவும், போராளிகளாகவும் மாறிய காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் போராட்ட கருவிகள் செய்தல், பின்னர் தோட்டம் பயிரிடுதல், விவசாயம் செய்தல், பானை செய்தல், தோல் பொருட்கள் செய்தல். துணி நெய்தல், வீடுகட்டுதல் முதலான தொழில்களில் தங்கள் முத்திரையை ஆண்களுக்கு நிகராக பதித்தனர், பின்னர், தாவரவியல், வேதியல், மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஆர்வம் செலுத்தி போற்றி வளர்ந்தனர்.

வேத காலத்தில் கி.மு.600க்கு பின் தான் பெண்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டனர். ரிக் காலத்தில் தான் ஆணாதிக்க சமுதாயம் தலைதூக்கியது. ஆனாலும் வேத காலத்திலும் பெண்கள் அனைத்து சமய சடங்குகளிலும் பொது விழாக்களிலும் பங்கு பெற்றார்கள், வேத பாடல்கள் பெண்மையின் பல்வேறு இயல்புகள், தாய்மை பண்புகள் பற்றியும், இலக்கியம், போர்க்கலைகள் மற்றும் பெண்களை தத்துவ ஞானிகள் பதவிக்கு உயர்த்தியது.
ஆனாலும் பெரும்பாலான பெண்கள் ஆரியர்களாகவே இருந்தனர். வேத துவக்கத் தில் சதி முறை, பால்ய விவாகம், விதவைக் கொடுமை மற்றும் பெண் சிசுக் கொலை போன்ற அவலங்கள் தலை தூக்காமல் இருந்தன, பூப்பெய்தியவுடன் பெண்களுக்கு திருமணம் மற்றும் திருமண தடைகள் குறைவாகவே இருந்தன. திருமணத்தின் போது பெற்றோரின் பங்கு கட்டாயமாக இருந்தது. ஆண்குழந்தை பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆண்வாரிசு குடும்பத்தின் பாதுகாவலன், பெற்றோரின் ஈம சடங்குளில் பங்கேற்பது, ஆண் மகனுக்கே உரிய உடமை எனவும் கருதப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

பிந்தைய வேத காலத்தில் (கி.மு.800-&600)

பெண்கள் மந்த நிலைக்கு தள்ளப் பட்டனர். பிராமணத்தில் மட்டுமே ஆண்களை போன்று பெண்களும் சம பங்கு வகித்தனர். பெண் மிகவும் “உணர்ச்சி”வசப் படக் கூடயவள் என்றும், “பகுத்தறிவு” இல்லாதவள் என்றும் கருதப்பட்டாள் பெண்களிடம் தீர ஆராயக் கூடிய, ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய மனப்பக்குவம் கிடையாது, பெண்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் நிலவினாலும், பெண்கள் இல்லாமல் ஆண்கள் முழுமை அடைய முடியாது என்றும், திருமணம் புரியாத பெண்கள் மட்டுமன்று, ஆண்கள் கூட சடங்காசாரங்கள் மற்றும் யாகங்களில் பங்கு பெற முடியாத நிலையும் நிலவியது. இக்காலத்தில்தான் பெண்களின் சொத்துரிமை மறுக்கப்பட்டது. அவர்களின் வருமானம் கணவன்மார்களிடம் அல்லது தகப்பன்மார்களிடம் தான் ஒப்படைக் கப்பட்டது. பெண் குழந்தை பிறப்பு சங்கடமாக கருதப்பட்டு வெறுக்கப்பட்டது, ஆனாலும் அரசரின் பட்டத்து இராணிகளும், அரசரின் அன்பிற்கு பாத்திரமானவர்களும் மரியாதையாக நடத்தப்பட்டனர்.

இதிகாச காலத்தில் மேலும் பெண்களின் நிலை நலிவுற்றது. அவளை கூர்மையான கத்தி முனைக்கும், தீராத பாவத்திற்கும், பாம்பின் விஷத்திற்கும், தீக்கும் ஒப்பிட்டனர். மேலும் அவள் பலவீனமானவள் என்றும். சிறு சிறு வாக்கு வாதங்களுக்கு கூட பொறுப்பானவள் என்று தள்ளிவைக்கப்பட்டாள், எல்லா தீங்குக்கும் அவளே பொறுப்பு என்றும் வேர் என்றும் கருதப்பட் டாள். இக்காலத்தில் தான் அவள் படுக்கையறை பதுமையாகவும், வாங்கி விற்கும் பொருள் மற்றும் பெண்களை பொது இடங்களில் மதிக்கக் கூடாது என்றும், வெற்றி பெற்றவனுக்கு பெண் பரிசாகவும் வழங்கப்படல். ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் முறை இக்காலத்தில் தான் இருந்தது (எடுத்துகாட்டு- திரௌபதி)

இராமாயண - மகாபாரத காலத்தில்
பெண்கள் பொட்டு கட்டி விட்ட தாசிகளாகவும், நெறி தவறிய நடன மங்கையராகவும் கருதப்பட்டனர். பொதுவாக பெண்கள் இன்பம் தரும் பொருளாக பாவிக்கப்பட்டனர். சமுதாயத்தில் மேல் மட்ட மக்கள் மற்றும் கீழ் மட்ட மக்கள் என்ற நிலை நிலவியது. பெண்கள் கற்புடனும், மிகவும் அடக்க ஒடுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கட்டுபாடு போடப்பட்டது (எடுத்துக்காட்டு- சீதை) சீதை தன் கற்பினை நிருபிக்க தீக்குளிக்க வேண்டும் என்று இராமன் கூறினான்.

பீஷ்மர் கூற்றுப்படி பெண்கள் பண்புள்ளவர்கள் என்றும் பண்பற்றவர்கள் என்றும் கூறுகிறார். பெண்கள் பூமியின் தாய்கள் என்றும், பாவ செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் இரண்டாமவர் என்றும், அவர்கள் முகத்தின் சாயலை கண்டே அவர்கள் பண்புள்ளவர்களா? அல்லது பண்பற்றவர்களா என்பதை அறிந்து கொள்ளும் வல்லமை ஆண்களுக்கு உண்டு என்று கூறுகிறார். ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பெண்கள் உண்மையுள்ளவளாகவும், சுத்தமானவளாகவும், ஆணுக்கு அடிமையாகவும், அவமானத்தை தாங்கிக் கொண்டு வாழவேண்டிய நிலை இக்காலத்தில் நிகழ்ந்தது. சாதி மற்றும் விதவை கொடுமை இருந்தது.

ஸ்மிருதி காலத்தில் மனுபெண்கள் ஆண்களை கவருவதற்காகவே படைக்கப் பட்ட பொருளாக கருதப்பட்டனர். மனு என்பவன் ஆண்கள் ஒரு போதும் தனிமையாக தங்களது தாயுடனோ, சகோதரியுடனோ, மகளுடனோ இருக்கக் கூடாது என்றும், எளிதில் வசீகரப்படுத்தப்படக் கூடியவர்கள் பெண்கள் என்றும் இகழ்ச்சியாக கூறியுள்ளார்.தாயை விட தந்தையே நூறுமடங்கு மதிக்கப்படத்தக்கவர் என்றும் மனு கூறுகிறார். கடவுளால் உருவாக்கப்பட்ட அணிகலன்களில் பெண்ணே சிறப்பான அணிகலன் என்றும் அவளால் மட்டும் தான் ஆணுக்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியும் என்றும் அவள் வீட்டின் வளம் என்றும், எனவே பெண்களிடம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேணடும் என்றும் பெண்களை ஒரு போதைப் பொருளாக மட்டும் மனு கூறியுள்ளார். இக்காலத்தில் தான் பெண்கள் தன் தந்தையிடமும் பின்னர் கணவர், மகன், பேரன்என்று யாரையாவது சார்ந்தே வாழ வேண்டிய நிலை உருவானது. பெண்கள் வீட்டு வேலைகளை செய்யவே பயன் படுத்தப்பட்டாள். கணவரின் இறப்பின் போது “உடன் கட்டையேறும்“ வழக்கம் இருந்தது. இளம் விதவை கள் கட்டாயமாக தீயில் தூக்கியெறியப்பட்டனர். ஜாதிய பாகுபாடு சமூகத்தில் கட்டாயப் படுத்தப்பட்டது.

புத்தர் காலத்தில்
பெண்கள் துறவறத்தில் பங்கு பெற்றனர். சமணர் களின் மத்தியில் பெண்கள் மீண்டும் ஆணாக பிறந்தால் தான் மகிழ்ச்சி என்ற நிலை இருந்தது. இதனை புத்தர் ஏற்றுக் கொள்ள வில்லை. ஒரு கன்னியாஸ்திரி அவர்களின் மடங்களில் ஏற்றுக் கொள்ளப்பட பேண்டும் என்றால் பிட்சுகளின் ஒப்புதல் பெற வேண்டிய நிலை மாறி ஒப்புதல் இல்லமாலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பெண்கள் யாசிக்க வெளியே செல்லும் போது அனுபவம் மிக்க பாதுகாவலர்களோடு தான் செல்ல வேண்டிய நிலையும் இருந்தது, பௌத்தமும், கிறிஸ்துவமும் இசுலாமியமும் பெண்கள் புனித நூல்களை வாசிக்கலாம், ஆனால் அவர்கள் போதிக்கக் கூடாது என்ற நிலையைக் கடைப்பிடித்தது.

பெண் என்கின்ற காரணத்தால் ஒரு பெண்ணை நிராகரிக்கக் கூடாது என்றும், அவளும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும் புத்தர் கூறியுள்ளார். பெரும்பாலான பெண்கள் கன்னிகாஸ்திரிகளாக துறவறம் மேற் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்தனர். வீட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் பெரும்பாலான பெண்கள் இந்த முடிவை எடுத்தனர். ஆயினும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு சமமாகவோ, பெருகவே இல்லை.

ஜாதகக் கதைகளில்
பெண்களை அகந்தையானவர்கள் நன்றியற்றவர்கள் மற்றும் அபாயகரமானவர்கள் என விமர்சிக்கின்றனர். ஒரு பெண்ணால் முக்கிய பதவிகளை வகிக்க முடியாது என்றும், அவளுக்கு குறுகிய மனப்பான்மையே உண் டென்றும் கூறுகிறது.

அரசர்கள் காலத்தில் பெண்களுக்கு சுயம்வரம் நடைபெற்றது “பர்தா” அணியும் பழக்கமும் வழக்கத்தில் வந்தது நிறைய பெண் கவிஞர்கள் இருந்தார்கள் அரசர் இன்புற்றிருக்க “அந்தப்புரம்“ இருந்தது. அலெக்சான்டர் காலத்தில் பெண்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஆண்களுக்கு நிகராக எதிரிகளுடன் போரிட்டனர். “பல தார மணம்“ வழக்கத்தில் இருந்தது. அசோகர் காலத்தில் பெண்கள் சமய சடங்குகளிலும் சமயச் சாரங்களிலும் பங்கு பெற்றதாக கருதப்படுகிறது. மேலும் அவர்கள் செயல் திறன் அலுவலர்களாகவும், பணிமனையின் பொறுப்பாளர்களாகவும், சிறைச்சாலையின் அலுவலர்களாகவும் செயல்பட்டனர். பெண்களுக்கு கல்வி அளிக்கப்படட்டது. நெசவுத் தொழிலில் பெரும்பாலான பெண்கள் பங்கு பெற்றனர் என்றும் அறிய முடிகிறது. தேவதாசி முறை சமுகத்தில் இருந்தது.

நம் இந்திய நாடு பல அந்நியர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர் நிறைய தாக்கத்தையும் உயர்ந்த மாற்றங்களையும் கொண்டு வந்தது. புதிய அரசியல் பரிணாமம், ஆங்கிலக் கல்வி சுதந்திர கலாச்சாரம், புதிய முதலாளித்துவம், கைத்தொழில் மற்றும் புதிய மதிப்பு உருவானது. சீரான நிதி முறை, நீதிமுறை போக்குவரத்து அறிமுகம், செய்தி தொடர்பு அவைகளில் எல்லாம் பெண்களின் பங்களிப்பு இருந்தது. நம்மை ஆங்கிலேயர்கள் சுரண்டுகிறார்கள் என்கின்ற உணர்வு கொள்ள அடிக்கல்லாக விளங்கியதே அவர்களின் கொடுங்கோலாட்சி தான் காரணமாக அமைந்தது. மூடநம்பிக்கை, விக்கிரக வழிபாடு, பல தெய்வங் களிடத்து நம்பிக்கை மற்றும் பரம்பரை அர்ச்சகர், ஜாதிய கொடுமைகளை எதிர்த்தனர். பெண்கள் சம உரிமை, விதவைகள் மறுமணம், பால்ய விவாகம், பெண் சிசுக் கொலை போன்ற வற்றை சீரமைப்புக் கொள்கைகளாக ஏற்றனர்.
ஒரு ஆண் பல பெண்களை மணத்தல், தேவதாசி முறை. இவை தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிராமணப் பெண்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பங்கேற்க முடிந்தது. காலனி ஆதிக்கத்தால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் பின்தள்ளப் பட்டார்கள். கல்வி மறுக்கப்பட்டது. சொத்துரிமை தடை செய்யப்பட்டது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டனர். பெண்கள் குழந்தை
பெற்றுக் கொடுக்கும் ஒரு எந்திரமாகவே கருதப்பட்டாள்.

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படடனர். சாதி, ஐதிகம், மூடநம்பிக்கை, கல்வி அறிவின்மை, சொத்துரிமை இல்லாமை போன்றவை பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் தடையாக இருந்தன.

பொருளாதார அமைப்பின் மாற்றத்தால் பெண்களின் வேலை வாய்ப்பு குறைந்தது, ஆண் பெண் வேறுபாடு அனுசரிக்கப்பட்டது பெண்கள் சரிசமமாக கூலி வழங்காமல் மறுதலிக்கப்பட்டனர். குடிசை தொழில்கள் வந்தன. அதிலும் பெண்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி போனது, சமூக இன்னல்கள் பெருகி னாலும் பெண்கள் மேம்பாட்டிற்கான சட்ட திருந்தங்களும் வந்தன. ‘சதி’ ஒழிப்பு வந்தது. பெண் சிசுக்கொலை தடுக்கப்பட்டது. பெண் பாலியல் கொடுமை, சொத்துரிமை, வாரிசுரிமை, பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆண் ஆதிக்கமும், கல்வியறிவின்மையுமே பெண்களின் பின்தங்கிய நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்து அனைவரும்
போராட்டத்தில் குதிக்க தீர்மானித்தனர்.

18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற் சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற் சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான்,
வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர் பைஜான்,பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

அதைபோல நம் நாட்டிலும் 33% பெண்களின் பங்கு அரசியலில் இருக்க வேண்டும் என்று பேச்சளவில் பேசிக் கொண்டிருக்கும் நாம் எப்போது செயல்படுத்தப் போகிறோம்? புரட்சியாளர் அமபேத்கர் அவர்கள் “NO MOVEMENT CAN SUCCEED WITH OUT THE WOMEN’S PARTICIPATION EQUALLY WITH MEN” என்று கூறுகிறார். 50% பெண்களின் பங்கு வேண்டும் என கூறி வலியுறுத்தும் அரசியல்வாதிகள் தங்கள் சொல்லிற்கேற்ப நடந்து கொள்கிறார் களா? நடைமுறை படுத்துகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். பெண்களும் போராடும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். காதலர் தினம், தாய்மார் தினம் போன்ற வரிசையில் பெண்கள் தினத்தை வைத்து பார்க்கக் கூடாது. மற்ற நாட்கள் போல் நாம் இந்த நாளை கொண்டாடக் கூடாது. நம் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டக்களத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு நாளாகவும், நமக்காக உயிர் நீத்த பெண் போராளிகளுக்கு நன்றியுணர்வோடு வீர வணக்கம் செலுத்தும் ஒரு நாளாகவும் கருத வேண்டும். இதுவரை உலக அளவில் 10 கோடி பெண்களுக்கு மேல் மாயமாகியிருக்கிறார்கள். அதில் 5 கோடி பெண்கள் இந்தியாவில் இருந்து மாயமாகி உள்ளனர் நாம் நம்மை புரட்சிகரப் பெண்களாக காட்டிக் கொண்டாலும் இன்றளவிலும் நம்முடைய உரிமைகளை முழுமையாக பெற்றோமாகில் இல்லை என்கின்ற எண்ணமே மேலோங்குகிறது. வெறும் பெண்களால் மட்டுமே பெண்கள் பெற விரும்பும் வெற்றி மற்றும் சுதந்திர நிலையை அடைய முடியாது. கண்டிப்பாக ஆண்களின் துணையும் நமக்கு அவசியம். எனவே ஆண்களோடு போராளிகளாய் இணைந்து சரிநிகர் சமமாக
உழைத்து நற்பெயரும் நன் மதிப்பும் பெற்று, பெண்க ளுக்கு எதிரான வன்முறையை வென்று வெற்றி பெறுவோம்.

வாழ்த்துகள்...
Related links :
  |   Gallery gallery
   
Recent Comments
Post your comments
Name :
Enter your Name 
Email ID :
Enter your Email ID 
Comments :
Solve this  
 
Related News
Advertisement
Subscribe Now
ad
Subscribe to the Newletter
I have read and agree to the Privacy Policy
Indian No. 1 Remarriage Matrimony
   
Copyright Β© 2011 Lawyers Line.. All rights reserved