Latest News :
- Police can lawfully arrest drivers for breath test, says Bombay High Court
- Lawyers Line (Law Journal - Tamil) Just Rs. 300/- pay online and get delivered at your home directly...
- Jayalalithaa`s bail plea to come up today (Monday) in Supreme Court
- Madras High Court moots parents plight over marriageable age for girls
- சவால்களை நோக்கி சட்டக் கல்வி...
![]()
குடும்ப நீதிமன்றங்களில் அண்மைக் காலமாகவே விவாகரத்து செய்யும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதற்கு முக்கிய காரணமாக அமைவது ‘புரிதல் இன்மை’ என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ‘புரிதல்’ எனப்படுவது கணவன்&மனைவிக்கு மட்டுமின்றி குடும்பத்தார் சுற்றத் தார் மற்றும் உறவினருடன் அன்பும், அமைதியுடன் கூடிய ஒற்றுமையாக வாழ்வதாகும். விவாகரத்து, மறுமணம் என்றால், கணவன்/மனைவியாக இருந்த வர்கள், அல்லது சேர்ந்து வாழ்ந்தவர்கள் இன்னொரு வருக்கு தன் மனைவியாக இருந்தவரை அல்லது கண வராக இருந்தவரை திருமணத்திற்கு(மறுமணத்திற்கு) விட்டுக்கொடுப்பதாகும். உங்களின் மனைவியாக இருந்தவர்தான் அல்லது உங்களிடம் கணவராக இருந்தவர்தான் மற்றொருவருக்கு கணவனாக அல்லது மனைவியாக இருக்கின்றார்கள் என்பதை உணர வேண்டும். நீச்சல் கற்றுக்கொண்ட பின் நீச்சலடிப்பதை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல் முதல் திருமண வாழ்வை நிச்சயமாக மறக்க இயலாது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இல்லாத அளவில், இன்றைய சமுதாயத்தில் விவாகரத்ததுக்கள்(மனமுறிவுகள்) பெருகி வருகின்றன. நல்ல குடும்பங்களே சமுதாயத்தின் ஆணிவேர்கள் குடும்பங்கள் சிதறும் போது குழப்பங்களும், துன்பங்களும் அதிகரிக்கின்றன. கணவன், மனைவி இருவரும் பிரியும் போது குடும்பத்தினர் அனை வரும் (குறிப்பாக குழந்தைகள்) பெரும் பிரச்னைக்கு உள்ளாகின்றனர். இல்லற வாழ்க்கை என்பது, குழந்தைகளைப் பெறுவதற்காக ஆணும், பெண்ணும் இணைவதற்குக் கொடுக்கப்படும் ஓர் உரிமம். அந்த உரிமத்தை புதுப்பிப்பது தான் 60 ஆவது திருமணம் என்று அன்றைய காலத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் உற்பத்திக்கு (குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு) உகந்ததாக அமையப்படும் திருமணங்களை சமூகம் அங்கீகரித்தாலும், திருமணமான பின் குழந்தைகள் இல்லாமல் வாழும் தம்பதியர்களையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. காரணம், குழந்தைகள் பின்னாளில் பெற்றோர்களுக்கு பாதுகாப்பான உறவாக அமைவதாக இருக்கப்படவேண்டும். குழந்தைகள் இல்லாத தம்பதியர் களுக்கு உறவினர்களின் பாதுகாப்பான உறவு அமைய வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் வயது முதிர்ந்த காலத்தில் மிகவும் துன்ப நிலைக்குத் தள்ளப்படுவார்கள். புலனின்பத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திருமணங்கள் நடைபெறுவதே அத்திருமணங்கள் ரத்து (விவாகரத்துகள்) ஆவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. கலியுகத்தில்(தற்போது நடைபெற்றுவரும் இவ்வுலகில்) திருமண வாழ்க்கை வெறும் புலனின்பத்திற்காக மட் டுமே இருக்கும் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. “தாம்பத்ய அபிருசிர் ஹேதுர், ஸ்திரிவே பும்ஸ்த்வே சஹிரதிர்”& அதாவது கலியுகத்தின் தாம்பத்யம் வெறும் செயற்கையான கவர்ச்சியாக மட்டுமே இருக்கும். ஆண்மையும், பெண்மையும் காமச் செயல்களில் அவர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறார்கள் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும்.(ஸ்ரீமத் பாகவதம் 12:2:3) வேத கருத்துபடி குடும்ப வாழ்வில், கணவன் தனது உடலின் பாதியை மனைவிக்கும், மனைவி தனது உடலின் பாதியை கணவனுக்கும் கொடுக்கிறார்கள். வேறு விதமாகக் கூற வேண்டுமெனில், கணவன் இல் லாத மனைவியும், மனைவி இல்லாத கணவனும் முழு மையில்லாதவர்களாக கருதப்படுகிறார்கள். சிவபெருமானுக்கும் சதிதேவிக்கும்(பார்வதி தேவி) வேத திருமண உறவு இருந்தது. ஆனால், சில நேரங்களில் பலவீனத்தின் காரணமாக, சில பெண்கள் தங்கள் தாய் தந்தையின் குடும்பத்தினருடன் அதிகமாக பற்று வைத்து விடுகின்றனர். சதி தனது மிகவுயர்ந்த கணவரான சிவ பெருமானை விட்டுச் செல்வது அவளது பெண்மையின் பலவீனத்தால்தான் என்று புராண வரலாறு தெரிவிக்கிறது. பெண்மையின் பலவீனம் என்பது போதிய பயிற்சியின்மையைக் குறிக்கின்றது. தற்கால பெண்களுக்கு பணம் சம்பாதிப்பது எப்படி? உடலை எவ்வாறு அழகு செய்வது? போன்ற விஷயங்கள் தான் கற்றுத்தரப்படுகின்றன. குடும்பத்தை எவ்வாறு நிர்வகிப்பது, கணவனிடம் எவ்வாறு நடந்து கொள்வது- அல்லது கணவன் மனைவியுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்-? என்ற புரிதல் இல்லாம லேயே பெண்ணிற்கு அல்லது ஆணிற்கு வயது ஆகி விடுகிறது என்ற காரணத்திற்காக திருமணம் செய்து முடிக்கப்படுகின்றது. ஒரு பெண் தனது இளம் வயதில் தந்தையாலும் பின் னர் கணவனாலும், அதன் பின்னர் வளர்த்த மகனாலும் பராமரிக்கப்படவேண்டியவள். நவீன காலத்தில் ஆணும், பெண்ணும் சக ஊழியர்களாக வேலைக்கு சென்றுவரும் நிலையில் யாரால்-, யார் பராமரிக்கப்படவேண்டும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இருவரிடம் இருக் கும் பொருளாதார பலம் சில நேரங்களில் கணவன் &மனைவி இடையில் ஆணவத்திற்கு வித்திடுகின்றது. பெண் உரிமை என்று பெண் அதிகமாக குடும்பத்திற் காக சம்பாதித்தாலும், அந்தப் பணம் கணவன் அல்லது மனைவி என்ற நிலையில் இருவரின் சம்பாத்யத்தால் உண் டான பணம் ஒன்றானால்தான் அது எதிர்காலத்தில் அவர்களுடைய பிள்ளைகளுக்கு பயனுள்ளதாக அமை யும். அந்த வகையில் குடும்ப ஒற்றுமையும் அமையும். அண்மைக் காலமாக நகரங்களில் பெண்கள் தமது துப்பட்டாவால் முகத்தைக் கட்டிக் கொண்டு வாகனம் ஓட்டுவது, சகஜமாக சாலையோரமாக, நடந்து செல்வது மற்றும் குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரணமான பேருந்திலும் என அனைத்து விதத்திலும் பெண்கள் தங்கள் முகத்தை துணியால் கட்டிக் கொண்டு நகரங் களில் வலம் வருவது அதிகரிக்கின்றது. இச்செயல் தூசி மற்றும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்று அவர்கள் நினைத்தாலும் சட்டம் தலைக்கவசம் அணிய வேண்டும், அவ்வாறே வாகனம் ஓட்டவேண்டும் என்கின்றது. ஆனால், யாரும் அதைப் பயன்படுத்த முன் வரவில்லை. முகத்தைத் துணியால் கட்டிக் கொண்டு செல்வதால் (திருமணத்திற்கு முன் (அ) பின்) யாருடனும் செல்லலாம் அல்லது தனது ஆண் நண்பர்களுடன் செல்லும்போது, சமூகத்தில் நாம் அடையாளம் காணாமல், இன்னாரது மகள் என்ற நிலை தெரியாமல் இருக்கலாம் என்று சில பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை தானாகவே தளர்த்திக் கொண்டு முடிச்சு போட்டு விடுகின்றார்கள். இதனால் வன்புணர்ச்சிக்கும் ஆளாக நேருகின்றது. பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும் என்று இன்றைய சமுதாயம் பரவலாக பிரச்சாரம் செய்வதால் திருமணத்திற்கு முன்பே கருத்ததரித்தல், கருக்கலைப்பில ஈடுபடுதல், விவாகரத்து போன்றவை சகஜ மாகி வருகின்றது. அதற்கு பின்னால் ஆண் இருந்தாலும் விழிப்புணர்வு பெண்ணுக்கு முதலில் தேவையாகிறது. பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களுக்கு பாது காப்பற்ற நிலை உருவாகி வருகின்றது. விவாகரத்து சட்டத்தை உபயோகிக்கும் பெண்கள் தங்களுக்குத் தாங் களே தீங்கினை விளைவித்துக் கொள்கின்றனர் என்பதை பெரும்பாலும் உணர்வதில்லை. தனக்கு அடங்காத கணவனை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரம் போன்ற சட்டங் களைக் கொண்டு அடக்க முயற்சி செய்து இறுதியில் விவாகரத்தில் முடிக்கிறார்கள். திருமணம் என்பது மிகவும் புனிதமான சடங்காகும். திருமணம் புரிபவர்களின் மனப்பான்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சாம வேதம்(1:3:9) பின் வருமாறு கூறுகின்றது. “உன் இதயத்தில் இருப்பதே என் இதயத்தில் இருக்கட்டும், என் இதயத்தில் இருப்பது உன் னுடையதாகட்டும்.” ‘விவாகரத்து’ என்னும் தமிழ்சொல் சமீபகாலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றே. தினம்தினம் கழற்றி மாட்டும் ஆடைகளைப் போல கணவன் மனைவியையும், மனைவி, கணவனையும் மாற்றுவது திருமணம் அல்ல. அக்னியை சாட்சியாக வைத்து திருமணம் செய்த பிறகு விலக்குவதும், விவாகரத்து செய்வதும் தனது வருமானத்திற்கு அல்லது கடைசி காலத்திற்கு துணை தேவை அல்லது உடல்ரீதியான உறவுக்கு ஒருவர் தேவை என்கின்ற நிலைக்காக மட்டுமே ஆகும். எவ்வாறு இருப்பினும். முதல் திருமணத்தினை எத்தனை திருமணம் செய்தாலும் ஆணோ அல்லது பெண்ணோ மறக்க இயலாது. எத்தனை திருமணம் வேண்டு மானாலும் மனமுறிவு பெற்று செய்து கொள்ள நாம் தயாராகின்றோம். அத்தனை திருமணங்களிலும் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தையை இரண்டாவது, அல் லது மூன்றாவது கணவனுக்கு அல்லது மனைவிற்கு பிறந்த குழந்தை என்று கூறமுடியுமா? அக்னி சாட்சி என்று சொல்லி திருமணம் செய்வது, நீ அக்னிக்கு பயப்படுகின்றாயோ இல்லையோ, உன் உடம்பில் அக்னி என்ற வெப்பத்தால் உருவான அக்னி என்ற வெப்பத்துடன் கூடிய குழந்தையை, இறுதி வரைக்கும் காப்பாற்றுவது பெற்றோரின் கடமை என்பதை மறுமணம் செய்து கொள்பவர்கள் உணர வேண்டும். கணவனிடமோ அல்லது மனைவியிடமோ விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் ஆண்/பெண் குழந்தைகளை ரத்து செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள். அவ்வாறு ரத்து செய்பவர்கள் குழந்தைகள் இறுதியில் (பெற்றோர்கள் இருந்தும்) அனாதைகளாக வாழ்ந்து தீயச் செயல்களில் ஈடுபட சமூக விரோதிகளால் பயன் படுத்தப்படுகின்றனர். “இவர்கள் உங்கள் குழந்தை, உங்கள் மூலம் பிறக்கின் றார்கள். ஆனால் உங்களால் பிறக்கப்படவில்லை” என்ற புதைந்துள்ள உண்மை மெய்ப்பொருளை ஒன்றாக, மனதில் கருதி, திருமணம் என்ற உயிர்கள் இணைப்பிற்கு உறுதி செய்ய விவாகரத்தைத் தவிர்த்து குடும்ப நீதிமன்றத்தை, ‘விவாகரத்து நீதிமன்றம்’ என்ற கேலிக்கூத்துக்கு உள்ளாக்காமல், பாதுகாப்போம் நம் திருமணத்தை. உருவாக்குவோம் விவாகரத்து இல்லாத, குடும்ப ஒற்றுமையைக் காக்கும் குடும்ப நீதிமன்றங்களை! Related links :
Recent Comments
Post your comments
Name :
Enter your Name
Email ID :
Enter your Email ID
Comments :
Solve this
Related News
ஏன்வழக்குரைஞராகக்கூடாது?
Why Not become an Advocate[..] |
||||||||
Copyright © 2011 Lawyers Line.. All rights reserved |