Sat 03, Dec 2022
lawyers line
You are in Home » Legal Articles » 2012 » Lawyers Line December 2012 Edition - Contents
LATEST NEWS  
   
By Lawyers Line|Email the author|Oct 05,2014   (4512 views)
news
Lawyers Line
Admin
வால்மார்ட் - ஊழலுக்கு ஒரு எச்சரிக்கை
Wall Mart - The upcoming corruptions


சிறுவர்களுக்கான நீதித் திட்டம் – The childs wealth scheme
ஒரு சமுதாயம் தன்னிடத்தில் உள்ள குழந்தைகளை எவ்வாறு நடத்துகின்றதோ, அதை வைத்தே அதன் உள்ளார்ந்த ஆன்மாவின் வெளிப்பாட்டை நாம் அறிந்துக் கொள்ள முடியும்`` எனக் கூறினார் நெல்சன் மன்டேலா.

குற்றவாளிகளின் கூடாரமா - புதுவை நீதிமன்றம்?
Pudhucherry Judical is supposed to become the court of criminals

கிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றோட்டமான சூழலில் அமைந்திருந்த இந்த நீதிமன்றங்கள் அனைத்தையும், ஒருங்கிணைத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதுவை & கடலூர் சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தான் இந்த அலரல் குரல்...
தனக்குத் தானே முனுமுனுத்துக் கொணடிருந்த வழக்கறிஞர்களின் முன் ஆஜாரானது நமது லாயர்ஸ் லைன் நிருபர் குழு...

அக்ரஹாரத்து அற்புத மனிதர் - வி.ஆர்.கிருஷ்ணஅய்யர் – The Noble Man Sri. V.R. Krishna Iyer
கேரள மாநிலம் மலபார் என்ற ஊரில் 1915&ல் பிறந்தவர். வைத்தியநாதபுரா ராமகிருஷ்ண அய்யர். இவர் பண்முக ஆற்றல் பெற்றவர். இவர் ஒரு சமூக போராளி. முற்போக்கு எண்ணம் கொண்டவர். இவர் தலைசிறந்த எழுத்தாளர் 70 நூல்களுக்கு மேல் எழுதியவர். இவர் சிறந்த அரசியல்வாதி. கம்யூனிச சோசலிச எண் ணம் உள்ளவர். இவர் தலை சிறந்த நிர்வாகி. கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக, மின்துறை அமைச்சராக சிறைத் துறை அமைச்சராக, சமூக நலத்துறை அமைச்சராக சிறந்த நிர்வாகம் செய்தவர். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக 1973ல் பொறுப்பேற்று உலகின் தலைசிறந்த தீர்ப்புகளை அளித்தவர். நமது ஊரில் மாநக ராட்சி உறுப்பினராக ஒருமுறை வந்தாலே 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுவார்கள். இவர் பல அமைச்சர் பதவியில் இருந்தாலும் இன்றும் எளிமையாக, சாதரண, அமைதியான மனித ராகவே திகழும் பண்பாளர். அந்த மாமனிதருக்கு இப்போது, 98 வயது. பிறந்தநாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது. வாழ்க அவர் பல்லாண்டு.

உரிமைகள் பாதுகாக்கப்படுமா? திருநங்கைகளின் அபய குரல்...
Righs to protect – The consequences of transgenders

நமது இந்திய சட்டமைப்பு, அனைத்து குடிமக்களுக்கும், பொருளாதாரம், சமுதாயம், கலாச்சாரம், அரசியல், கருத்து சுதந்திரம், மதம், நம்பிக்கை, அந் தஸ்து மற்றும் சந்தர்ப்பம் என அனைத்தின் அடிப்படையிலும் சமமாக நடத்தப்படும் நிலையை தர வேண்டும் என்றுக் கூறுகின் றது. இது தான் நம்மை சுதந்திர ஜனநாயக நாடாக அடை யாளம் காட்டுகின்றது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியப் படுகிறதா? எனக் கேட்டால், இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அனைத்து குடி மக்கள் என்றால் நாட்டில் வாழும் அனைத்து மனிதர்களை யும் குறிப்பதாகும். ஆனால், திரு நங்கைகள் இதில் சேர்க்கப்படு வதில்லை.

சிறையில் சிறப்புவகுப்பு - Special Class in Prison
தமிழ்நாட்டு மத்திய சிறைகளில் சிறப்பு வகுப்பு ‘கி’ வகுப்பு ‘ஙி’ வகுப்பு என்ற வகையில் சிறைவாசிகள் வகைப்படுத்தப்படுகின்றனர். நிறைய பேர் ‘A’ கிளாஸ் என்றவுடன் அதனை சிறைக் கண்காணிப்பாளரே வழங்குவார் என்று எண்ணியுள்ளனர். ஆனால், அந்த சலுகையை நீதிமன்ற காவலுக்கு ஒருவரை உட்படுத்தும் நீதிமன்றம்தான் வழங்க முடியும் என்பது தான் உண்மை.

விவாகரத்து இந்திய பெண்களின் நிலை
Divorce – The Indian Females

இக்காலத்தில் உயர்ந்து வரும் விவகாரத்தின் எண்ணிக் கையை குறித்து இந்தியாவில் பல ஊடகங்களில் எழுதப்பட்டாலும், இதன் முக்கிய காரணமாக இளம் தம்பதியினரின் ஆதிக்க மனப் பான்மையும், பணிவின்மையுமே காரணமாக அமைந்திருக்கிறது என் றால் அது மிகையாகாது. ஆனால், என்னை பொறுத்தவரை இன்னும் விவாகரத்து எண்ணிக்கைகள் அவ்வாறாக அதிகரிக்கவில்லை என்றே கூறுவேன். ஏனெனில், இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் தைரியமாக வெளிவந்து விவாகரத்து கோருவதில்லை.

News @ Glance
Court asks police official to tender apology
India’s New Visa Processing
Death of woman
denied an abortion causes uproar in Ireland
10,000 in Ireland protest death of dentist denied abortion
பிரிவினை மட்டுமே விவாகரத்துக்கு காரணமாக முடியாது
பினோத் குமாருக்கு எதிராக ஸ்ரீமதி. மாதவி குமாரியின் வழக்கு, பிப்ரவரி 20, 2009.
உண்மையான தீர்ப்பு, 1998ன்படி 147 &ஆம் எண்ணில் இருந்து முறையீடு திருமண வழக்கு எண், 1998ன் 166&ல் பாட்னா குடும்ப நீதிமன்றத்தில், முதன்மை நீதிபதியான ஸ்ரீமதி. ரேகா குமாரியினால், 24.1.1998 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் சட்டத்தை எதிர்த்து தொடரப்படும் வழக்கு பினோத் குமார்..... பாசுதீயோ பிரசாத்தின் மகன், மோஹல்லா ஸ்டேட் பாங்க் காலனி, தானாபூர், குடியிருப்பு எண்.6, பி.எஸ். தானாப்பூர் மாவட்டம்,

குற்றவாளிக்கு சாதகமாக உள்ளதா? இந்திய குற்றவியல் நீதி முறை...
Indian Penal Code

வளர்ச்சி மற்றும் நாகரீகம் இல்லாத காலத்தில், இந்த சமுதாயத்தில் குற்றவியல் நீதி என்று எதுவுமே இருந்திருக்கவில்லை. எந்த ஒரு நபரும் யாரால் வேண்டுமானாலும் தாக்கப்பட்டு அவரது உயிர் மற்றும் உடைமைகள் சூரையாடப்படலாம். தொடக்கத்தில் தாக்கப்பட்டவர் இதற்கு கட்டுப்பட்டோ அல்லது எதிர்த்தாக்குதலையோ நடத்துவார். மெதுவாக பஞ்சாயத்து முறைகள் வந்தபோது கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் போன்ற நீதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவே ஆதிகால குற்றவியல் நீதி முறையாகும். இவையே பிற்காலத்தில் நாகரீக வளர்ச்சியின் போது, பல பரிமானங்களில் இது தற்போதைய நீதி முறையாக வளர்ச்சியடைந்தது. ஆனால், இப்போது இவற்றை கூர்மையாக உற்று நோக்கினால், இது அதிகம் குற்றம் புரிந்தவருக்கு சாதகமாகவே இருப்பது நன்றாகத் தெரியும். ஏனெனில், இந்நீதி முறை குற்றஞ்சுமத்தப்பட்டவருக்கு, காவல் துறையினர் கேள்வி கேட்கும் போது, பதில் அளிக்காமல் இருக்கும் வசதியை வழங்கியுள்ளது. மேலும் சந்தேகத்தின் பலனையும் அளிக்கின்றது. இதன் மூலம் அரசு தரப்பு வழக்கறிஞரினால் இந்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர் குற்றம் புரிந்து இருந்தாலும் சந்தேகத்தின் இருப்பதன் அடிப்படையிலும் குற்றம் சரிவர நிரூபிக்கப் படவில்லை என்பதாலும் விடுவிக்கப்பட நேரிடுகிறது.

குழந்தை தத்தெடுத்தல் - பாதுகாவலர்கள் மற்றும் காப்பாளர்கள் சட்டம்
Child Adoption – The Guadians Act

தத்தெடுத்தல் என்பது, குழந்தையில்லாத தம்பதியினர் மற்றும் தனியாக வாழும் மக்களுக்கு மட்டுமன்றி வீடில்லாத குழந்தைகளுக்கும் ஒரு மிகச் சிறந்த வழியாகும். மரபியலாக தொடர்பில்லாத நபர்களிடையே பிள்ளை மற்றும் பெற்றோர் என்னும் உறவை ஏற்படுத்துகின்றது. இது, தங்களுக்கு பிறக்காத ஒரு பிள்ளையை மக்கள் எடுத்து அதனை தங்களது குடும்பத்தில் ஒருவராக வளர்க்கும் நடைமுறை என விவரிக்கப்படுகின்றது. சட்டப்பூர்வ நியதியாக இந்துச் சமுதாயத்தின் அங்கத்தினர்களிடையே மட்டும் தத்தெடுத்தல் இருந்தது. ஆனால், கலாச்சாரம் அதனை இன்றைய அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க அனு மதித்துள்ளது. இந்துக்கள் மட்டுமே குழந்தைகளை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்க முடியும். மற்றும் பிற சமுதாயத்தினர் அவர்களின் சட்டப்பூர்வ பாதுகாவலர்களாகத் தான் இருக்க முடியும்.

மராட்டிய சிங்கம் மறைந்தது The Maratian Lion – No more
நாடு என்ன செய்தது உனக்கு என்ற கேள்விகள் கேட்பதைவிட நீ என்ன செய்தாய் அதற்கு என்பதை போல, தான் பிறந்த மராட்டிய மண்ணுக்கு அரும்பாடு பட்ட தலைவர். பாலா சாகிப் பால்தாக்கரே மராட்டியத்தின் மந்திரசக்தி யாகவே திகழ்ந்து, மராட்டிய புலி, மராட்டிய சிங்கம், மராட்டியத்தின் மிக உயர்ந்த தலைவர் சிவசேனா தொண்டர்களின் கடவுள் என போற்றப் பட்ட தலைவர், லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு ஆளானார். மராட்டிய மாநிலத்தின் கலாச்சார தலைநகர் என்ற சிறப்புக்குரிய புனே நகரில் 1926ல் பிறந்தார். இவர் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாகவும், பத்திரிகையாளராகவும் இருந்தவர். இவரின் தந்தை திரு.கேஷவ்சீத்தாராம் தாக்கரே. இவர் சிறந்த முற்போக்கு எழுத்தாளர், சிறந்த சமூக சேவகர், நாட்டில் சமுதாய சீர்கேடுகளான சாதி கொடுமைகளை எதிர்த்தவர் டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியாரின் மீது அன்பு கொண்டவர். பெரியாரை போலவே மராட்டிய மாநிலம், மராட்டியருக்கே என்ற கோஷத்தை முன் மொழிந்தவர் தான் கேஷவ் சீத்தாராம் தாக்கரே.

கல்வி உரிமை - Rights to Education
ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத் திற்கான உந்து சக்தியாக கல்வி இருக்கின்றது. கல்வி, இந்தியாவில் பலரின் தலையெழுத்தை மாற்றுவதில் முக்கிய பங்கெடுத்து வருகின்றது. இந்தியாவில் சுதந் திரத்திற்கு பிறகு பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, கல்வியை மேம்படுத்த முடியாமல், போனாலும், கடந்த 20 வருடங்களாக, பல வழிகளில் அனைவருக் கும் கல்வி என்னும் கொள்கையில், இந்தியா உறுதியாகவே இருந்து வருகின்றது. மேலும் இளைய சமுதாயத்தினரை கவனிக்காமல் விட்டால், அது நாட்டின் எதிர்காலத்திற்கு பெரிய சாபக் கேடாக அமையும் என அறிந்து 14 வயது வரை சிறுவர்களுக்கு கட்டாய கல்வி என்னும் சட்டத்தைக் கொண்டு வந்து கல்வியை சிறுவர்களின் உரிமையாக்கி உள்ளது.
Related links :
Video video   |  
   
Recent Comments
Post your comments
Name :
Enter your Name 
Email ID :
Enter your Email ID 
Comments :
Solve this  
 
Related News
news
உடைமை கைப்பற்றுதலுக்கான மேல்மு[..]
news
ஏன்வழக்குரைஞராகக்கூடாது?
Why Not become an Advocate[..]
news
விவாகரத்துக்களை தவிர்ப்போம்
கĬ[..]
Advertisement
Subscribe Now
ad
Subscribe to the Newletter
I have read and agree to the Privacy Policy
Indian No. 1 Remarriage Matrimony
   
Copyright Β© 2011 Lawyers Line.. All rights reserved